மதுரை ரவுண்டானா விபத்து - நூலிழையில் தப்பித்த அமைச்சர், அதிர்ச்சியில் மக்கள்..!

மதுரையில் செல்லூர் ராஜூ கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விபத்து ஏற்பட்டது.

மதுரை ரவுண்டானா விபத்து - நூலிழையில் தப்பித்த அமைச்சர், அதிர்ச்சியில் மக்கள்..!
அமைச்சர் செல்லூர் ராஜூ
  • Share this:
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சிறு விபத்து நேர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை செல்லூர் ரவுண்டானா அருகே கபடி வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில் கபடி வீரர்கள் சிலை அமைப்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதிதாக கட்டிக் கொண்டிருந்த ரவுண்டானா மேல் நின்று அமைச்சர் பேசத் துவங்கினார்.

அவர் பேசிக் கோண்டிருக்கும்போதே ரவுண்டானாவின் ஒரு பகுதி பாரம் தாளாமல் உடைந்து விழுந்தது. அதில் சிக்கிய சில நிர்வாகிகள் உடனடியாக மீட்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.




ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியில் பல்வேறு கட்டிடங்கள் வேலை பார்க்கப்பட்டு வருகிறது. இதில் அமைச்சர் திறந்து வைக்கும் போதே நடந்த இந்த விபத்து மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...
First published: March 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading