பிரதமர் மோடி பாராட்டிய சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா UNADP நல்லெண்ணத் தூதராக நியமனம்

பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மோகனின் மகள் நேத்ரா UNADP நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி பாராட்டிய சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா UNADP நல்லெண்ணத் தூதராக நியமனம்
நேத்ரா
  • Share this:
கடந்த மாதம் 31-ம் தேதி பிரதமர் மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர், ‘கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் குறித்து உருக்கமாக பேசினார். அந்த உரையில், கொரோனா ஊடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உதவியவர்களையும் குறிப்பிட்டு பேசினார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘கொரோனா ஊரடங்கு காலத்தில் எண்ணற்ற மக்கள் தங்களுடைய சொந்த சேமிப்பைக் கொண்டு ஏராளமான மக்களுக்கு உதவியுள்ளனர். அதில், மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன் என்பவர் அவரது மகளின் படிப்புச் செலவுக்காக வாழ்நாள் முழுதும் உழைத்து சேர்த்துவைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தைக் கொண்டு ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த ஏழைகளுக்கு செலவிட்டு உதவி செய்துள்ளார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள் என்றார்.

இதனையடுத்து மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மதுரை மோகனுக்கு பாராட்டுகள் குவிந்தன. அவரது மகள் நேத்ராவின் கல்விக்கு உதவிகளும் குவிந்து வந்தது. இந்நிலையில்  நேத்ராவை United Nations Association for Development and Peace (மேம்பாடு மற்றும் அமைதிக்கான ஐக்கிய நாடுகளின் சங்கம்) சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


மேலும், அவருடைய எதிர்காலத்திற்காக சுமார் ஒரு லட்ச ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சங்கம், ஐநா சபையின் அங்கீகாரம் பெற்றதே தவிர, ஐநாவின் கிளை அமைப்போ அல்லது துணை அமைப்போ இல்லை.
First published: June 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading