செங்குளம் பட்டாசு விபத்து எதிரொலி: ஆலைகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு

மதுரை மாவட்டம் செங்குளம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செங்குளம் பட்டாசு விபத்து எதிரொலி: ஆலைகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு
ஆலைகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு
  • News18
  • Last Updated: October 28, 2020, 5:06 PM IST
  • Share this:
மதுரை மாவட்டம் செங்குளம் ஊராட்சியில் செயல்பட்டு வந்த ராஜலட்சுமி பட்டாசு ஆலையில் கடந்த 23ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பலியான நிலையில் மதுரை மாவட்டத்தில் செயல்படும் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு குறித்தும், பணியாளர்களின் விழிப்புணர்வு குறித்தும் மாவட்ட தீயணைப்பு மீட்பு துறை அலுவலர் கல்யாணகுமார் ஆய்வு மேற்கொண்டார்.  நல்லூர் கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்த அவர் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பணியாற்ற பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பட்டாசு ஆலையில் பணியாற்றும் பணியாளர்கள் கையாள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் அவர்களிடம் எடுத்துரைத்தார்.Also read... உள் ஒதுக்கீடு மசோதாவில் கையெழுத்திடாததற்கு கண்டனம்: ஆளுநருக்கு பேனா அனுப்பும் போராட்டம் செய்த இந்திய மாணவர் சங்கம்..

விபத்து ஏற்படாமல் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும், விபத்து ஏற்பட்டால் அதில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் பணியாளர்களுக்கு விளக்கப்பட்டது. பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ராஜா சந்திரசேகர் ஆய்வின் போது உடன் பங்கேற்றார்.
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading