வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றால் தேர்தல் ஆணையத்தில் புகார்- மதுரையில் குடியிருப்புவாசிகள் வைத்த அசத்தல் பேனர்

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றால் தேர்தல் ஆணையத்தில் புகார்- மதுரையில் குடியிருப்புவாசிகள் வைத்த அசத்தல் பேனர்

பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு எதிராக பேனர்

மதுரையில் வாக்குக்கு பணம் கொடுத்தால் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும் என்று குடியிருப்புவாசிகள் பேனர் வைத்துள்ளனர்.

  • Share this:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக புகார் எழுகிறது.

இதனையடுத்து மதுரை கோச்சடை பகுதியில் அமைந்துள்ள சாந்தி சதன் குடியிருப்பு வளாகத்தில் சுமார் 600 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இந்தநிலையில் இந்த குடியிருப்பு வளாகத்தின் முகப்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்யும் அரசியல் கட்சியினர் குறித்து தேர்தல் ஆணைய அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து பலகை  வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியிருப்பு வளாக செயலாளர் பாலகுரு கூறுகையில்,
சுயமாக சிந்தித்து வாக்களிக்க முயற்சிக்கும் வாக்காளர்களை  தங்கள் வசம் கவருவதற்காக பல அரசியல் கட்சியினர் பணத்தை வழங்கி வாக்குகளை கவர முயற்சி செய்கிறது.

பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பதனால் நேர்மையான அரசாங்கம் உருவாக்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகிறது. இதனால் எங்களது குடியிருப்பு வளாகத்தில் உள்ள இரண்டாயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் சமரசமின்றி  சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அனைவரது ஒப்புதலையும் பெற்ற பின்னரே இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதாக தெரிவித்தார். இதுபோன்று தமிழகத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: