’தலைமை ஏற்க வா’ போஸ்டர்கள்.. மதுரையில் ரஜினி பிறந்தநாளை கொண்டாட தயாராகும் ரஜினி ரசிகர்கள்..

மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்

தமிழகம் தலை நிமிர தலைமையேற்க வா தலைவா என்ற வாசகத்துடன் மதுரை நகர் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்தினர் போஸ்டர்களை ஒட்டி மீண்டும் மதுரையில் போஸ்டர் யுத்தத்தை துவக்கி உள்ளனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  டிசம்பர் 12-ம் தேதி வரும் ரஜினியின் பிறந்த நாளை கொண்டாட மதுரையில் ரஜினி ரசிகர்கள் தயராகின்றனர்.

  திரை உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்துக்கு வரும் டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி பிறந்தநாள் அவர் ரசிகர் மத்தியில் மிக விமரிசையாக கொண்டாடப்படும். அதற்காக தற்போது மதுரையில் உள்ள ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டும் துவங்கியுள்ளனர்.

  இந்த நிலையில் ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்தையும் கூறிவிட்டு, தமிழக அரசியலுக்கும் அழைக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர் மதுரை ரசிகர்கள்.

  Also read... Soorarai Pottru | சூரரைப்போற்று படத்திற்கு, ரியல் லைஃப் ஹீரோவான கேப்டன் கோபிநாத்தின் மார்க் எவ்வளவு தெரியுமா?  அந்த போஸ்டரில் தமிழகம் தலை நிமிர தலைமையேற்க வா தலைவா என்ற வாசகத்துடன் மதுரை நகர் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்தினர் போஸ்டர்களை ஒட்டி மீண்டும் மதுரையில் போஸ்டர் யுத்தத்தை துவக்கி உள்ளனர்.

  மதுரை மாநகர் ரஜினி மக்கள் மன்ற துணை செயலாளர் அழகர்சாமி தலைமையிலான குழுவினர் இந்த போஸ்டர்களை மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: