Home /News /tamil-nadu /

மதுரை ரயில் நிலைய வளாகத்திற்கு வரும் சைக்கிள்களுக்கு 10 ரூபாய் கட்டணம் வசூல் - பொதுமக்கள் அதிருப்தி

மதுரை ரயில் நிலைய வளாகத்திற்கு வரும் சைக்கிள்களுக்கு 10 ரூபாய் கட்டணம் வசூல் - பொதுமக்கள் அதிருப்தி

சைக்கிள்களுக்கு 10 ரூபாய் கட்டணம் வசூல்

சைக்கிள்களுக்கு 10 ரூபாய் கட்டணம் வசூல்

Madurai Railway Station: மதுரை ரயில் நிலைய வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி.

  • News18
  • Last Updated :
மதுரை ரயில் நிலையத்தின் மேற்கு நுழைவாயில் பகுதியில் ரயில்வே ஊழியர்களுக்கான பிரத்யேக வாகன நிறுத்தத்தில் பிரீமியம் வாகன காப்பகம் என்ற பலகை வைத்து வசூலில் தீவிரம் காட்டி வருவது பயணிகள் மற்றும் ரயில்வே துறை பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. 

குறிப்பாக இருசக்கர வாகனத்திற்கு முதல் 6 மணி நேரத்திற்கு 20 ரூபாயும் மற்றும்  சைக்கிள்களுக்கு 12 மணி நேரத்திற்கு 10 ரூபாயும் கட்டணமும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

ரயில் நிலையத்தில் மேற்கு நுழைவாயில் பகுதியில் பல அடுக்கு வாகன காப்பகம் ஏற்கனவே செயல்பட்டு வருகிற நிலையில், அதன் குத்தகைதாரர்கள் ரயில் வளாகம் முழுவதையும் ஆக்கிரமித்து வசூலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

Also read... மதுரை மேயர் கணவரின் அதிகார அத்துமீறல்களை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும் - செல்லூர் ராஜூ

மதுரை மாநகராட்சி காப்பகங்களில் இருசக்கர வாகனத்திற்கு 12 மணி நேரத்திற்கு 8 ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி