• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எம்ஜிஆராக - விஜய், ஜெயலலிதாவாக - சங்கீதா... மதுரையில் ஒட்டப்பட்ட சர்ச்சை போஸ்டர்

எம்ஜிஆராக - விஜய், ஜெயலலிதாவாக - சங்கீதா... மதுரையில் ஒட்டப்பட்ட சர்ச்சை போஸ்டர்

விஜய்-எம்ஜிஆர், சங்கீதா-ஜெயலலிதா

விஜய்-எம்ஜிஆர், சங்கீதா-ஜெயலலிதா

மதுரையில் நடிகர் விஜய்-சங்கீதா திருமண நாளை கொண்டாடும் விதமாக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தோற்றத்தில் கணவன்-மனைவியாக சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மதுரையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை முழுவதும் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவியே என விஜய் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும், மக்கள் இயக்கத்தின் புரட்சி தலைவரே என நடிகர் விஜய்யை எம்ஜிஆர் போலவும் சித்தரித்து அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.

Also read... மாஸ்க், தனிமனித இடைவெளி இல்லையா? வருகிறது புதிய அபராத முறை



விஜய்-சங்கீதா திருமண நாளை கொண்டாடும் விதமாக ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை உருவகப்படுத்தும் தோற்றத்தை கணவன்-மனைவி போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தெற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் கில்லி சிவா என்பவரால் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை மாவட்ட முக்கிய நிர்வாகிகளின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: