Home /News /tamil-nadu /

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக முகநூலில் கருத்து - மதுரையைச் சேர்ந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக முகநூலில் கருத்து - மதுரையைச் சேர்ந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு

கோப்புப்படம்.

கோப்புப்படம்.

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக முகநூலில் கருத்து பதிவிட்டதாக மதுரையைச் சேர்ந்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புக்கு ஆதரவாக முகநூலில் புகைப்படங்கள் பதிவிட்ட இளைஞர் மீது மதுரையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Also read: மதுரையில் கனமழை; வீடு இடிந்து பொருட்கள் நாசம்

    மாவோயிஸ்டுகள் பிஜாப்பூரில் போலீஸ் துணை ஆய்வாளரைக் கொன்றது தொடர்பாக மதுரை பீபீகுளத்தைச் சேர்ந்த இளைஞர் விவேக் முகநூலில் சர்ச்சைக்குறிய கருத்துகளையும், மாவோயிஸ்ட் அமைப்பில் பெண்கள், இளைஞர்கள் பயிற்சி எடுப்பது போல புகைப்படங்களையும் வெளியிட்டார்.



    இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் ஆட்சிக்கு எதிராகவும், பொது அமைதியைக் சீர்குலைக்கும் வகையிலும் பதிவுகள் செய்ததாகக் கூறி தல்லாகுளம் காவல்நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவேகிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Facebook, Maoist

    அடுத்த செய்தி