70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

மதுரை அருகே 70 வயது மூதாட்டியை திட்டம் போட்டு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
குற்றவாளி
  • News18
  • Last Updated: September 8, 2020, 9:49 AM IST
  • Share this:
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே திருகானை கிராமத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி இரவில் வீட்டில் தனியாக இருப்பதை, அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதான கார்த்தி பாண்டி என்பவர் நோட்டமிட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு மூதாட்டி தனியாக இருந்தபோது, அத்துமீறி உள்ளே நுழைந்த கார்த்தி பாண்டி, மூதாட்டியிடம் தவறான வார்த்தைகளை பிரயோகித்து உள்ளார். அதனை தொடர்ந்து மூதாட்டி, கார்த்தி பாண்டியை  வெளியேறுமாறு கூறியுள்ளார்.Read... மாப்பிள்ளை பிடிக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை... சோக சம்பவத்தின் பின்னணி


இந்நிலையில் கார்த்திக் பாண்டி, வலுக்கட்டாயமாக மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரை சமாளிக்க முடியாமல் திணறிய மூதாட்டி, மறுநாள் காலை நடந்தவற்றை அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கார்த்திக் பாண்டியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
First published: September 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading