ஆயுதங்களுடன் இருதரப்பினரிடையே மோதல்... முன்னாள் எம்.எல்.ஏ., உள்பட 50 பேர் கைது!

பதிலுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னம்பலம் தரப்பும் பதில் தாக்குதலில் ஈடுபட அந்த பகுதியை களேபரம் ஆனது. இதைத்தொடர்ந்து சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்தனர்.

ஆயுதங்களுடன் இருதரப்பினரிடையே மோதல்... முன்னாள் எம்.எல்.ஏ., உள்பட 50 பேர் கைது!
முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம்
  • Share this:
மதுரை அருகே இருதரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் வீடுகள் சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ., உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே கருவனூர் கிராமத்தில் பல பிரிவுகளைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் மகன் தில்லையம்பலம் அங்குள்ள மற்றொரு பிரிவைச் சேர்ந்த நண்பர்களுடன் வெளியே குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.

தில்லையம்பலம் சட்டையை கழற்றி வைத்து குளித்துக் கொண்டிருந்தபோது பணத்துடன் இருந்த அவரது சட்டை காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதை யார் எடுத்தார் என்பது தொடர்பாக தில்லையம்பலம் மற்றும் மற்றொரு பிரிவைச் சேர்ந்த அவரது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.


இதைத்தொடர்ந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் மகன் வீட்டிற்கு வந்த எதிர் தரப்பைச் சேர்ந்த பூபதி உள்ளிட்ட 4 பேர், அங்கிருந்த வீடுகளை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்டனர்.

பதிலுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னம்பலம் தரப்பும் பதில் தாக்குதலில் ஈடுபட அந்த பகுதியை களேபரம் ஆனது. இதைத்தொடர்ந்து சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்தனர். இருதரப்பும் பயங்கர ஆயுதங்களுடன் இருப்பதைக்கண்டு அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்த நிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் மற்றும் அவரது இரு மகன்கள், இரு தரப்பைச் சேர்ந்த ஆண், பெண் என 50க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கருவனூரில் பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see...


First published: May 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading