பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து இச்சைக்கு அழைத்த டிடெக்டிவ் ஏஜென்ட் கைது!

மதுரையில் தன் அலுவலகத்தில் பணியாற்றிய பெண்ணை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து இச்சைக்கு இணங்குமாறு மிரட்டிய தனியார் டிடெக்டிவ் ஏஜென்டை போலீசார் கைது செய்தனர். 

பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து இச்சைக்கு அழைத்த டிடெக்டிவ் ஏஜென்ட் கைது!
காவல் நிலையம்
  • Share this:
மதுரை ஊமச்சிக்குளம் அன்னை வேலுநகரைச் சேர்ந்தவர் 28 வயதான  கணேஷ் ஆனந்த். மதுரை அய்யர்பங்களா பகுதியில் ஸ்பைடர் என்ற பெயரில் தனியார் டிடெக்டிவ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்திற்கு நிர்வாக பணிக்கு ஆள் தேவை என தனியார் நிறுவனம் மூலம் 18 நாட்களுக்கு முன் இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளார். ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் மதுரை செல்லூரை சேர்ந்த லோடுமேன் ஒருவரை 5 ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக்கில் பழகி காதல் திருமணம் செய்துள்ளார்.

மதுரை செல்லூரில் தம்பதிகள் வசித்து வரும் நிலையில் குடும்ப வறுமை காரணமாக டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சென்ற அந்த பெண், இணையதளத்தில் வந்த டிடெக்டிவ் நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து விண்ணப்பித்துள்ளார்.


நேர்முகத்தேர்வில் அவரை கணேஷ் ஆனந்த் தேர்வு செய்த நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மே 23 அன்று அய்யர்பங்களாவில் உள்ள டிடெக்டிவ் நிறுவனத்திற்கு அந்த பெண் பணிக்குச் சென்ற நிலையில் மதியம் 12:30 மணியளவில் அலுவலக கதவுகளை அடைத்த டிடெக்டிவ் கணேஷ்ஆனந்த், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் அங்கிருந்த கட்டையால் அவரை தாக்கி ஆடைகளை அவிழ்க்க கூறியுள்ளார். மறுத்த போது அடித்து ஊமை காயம் ஏற்படுத்தியுள்ளார். அடிக்கு பயந்து ஆடைகளை அவிழ்த்த பெண்ணை, முழுவதுமாக வீடியோ எடுத்த கணேஷ் ஆனந்த், தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் சமூக வளைதளங்களில் வீடியோவை வெளியிடுவேன் என்றும், வெளியில் கூறினால் கணவரை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

அங்கிருந்து தப்பிய அந்த பெண் நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவர் தனது நண்பர்களுடன் கணேஷ் ஆனந்தை தாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து செல்லூர் காவல் நிலையத்தில் கணேஷ் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து தனக்கும் அச்சுறுத்தல் வரலாம் என்று பயந்த அந்த பெண், மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு நேராக சென்ற போலீசார் , கணேஷ் ஆனந்திடம் நடத்திய விசாரணையில் சம்மந்தப்பட்ட அலுவலகத்தை முதலில் நகைக்கடை அலுவலகம் என்று கூறி வாடகைக்கு எடுத்ததும், பின்னர் அடிக்கடி பெண்கள் நடமாட்டம் இருந்ததால் சந்தேகம் அடைந்து அந்த காம்ப்ளக்சில் உள்ள பிற நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கேட்ட போது சினிமாவுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் நிறுவனம் என்று கூறியுள்ளார்.

அதன் பிறகும் சந்தேகம் நீடித்ததால் இறுதியில் துப்புறிவு நிறுவனம் என்று கணேஷ் ஆனந்த் கூறியதாக அங்குள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். அவரது நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததாகவும் இதனால் அவருடன் பழுகுவதை அங்குள்ளவர்கள் தவிர்த்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து கணேஷ் ஆனந்திடம் நடத்திய விசாரணையில் பெண் அளித்த புகாரில்  உண்மை இருப்பதை உறுதி செய்து அவரை கைது செய்தனர். அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றர்.

இதற்கு முன் அங்கு பணியாற்றிய பெண்களிடம் அல்லது துப்பறிவு என்கிற பெயரில் பெண்களை மிரட்டும் சம்பவங்களை கணேஷ் ஆனந்த அரங்கேற்றினாரா என்கிற கோணத்தில் விசாரணை வளையத்தை தல்லாகுளம் போலீசார் விரிவு செய்துள்ளனர்.










Also see...
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading