• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பணிச்சுமை காரணமாக காவல்துறையினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

பணிச்சுமை காரணமாக காவல்துறையினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

பணிச்சுமை காரணமாக காவல்துறையினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    மதுரை அல்லது திருச்சி மத்திய சிறையில் மனநல ஆலோசகர், மனநல சிகிச்சையில் பயிற்சி பெற்ற சமூக ஆர்வலரை நியமிக்ககோரி மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, விடுமுறை இல்லாத, அதிக தொடர் பணியால் காவல் துறையினர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவேதான் பல விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று தெரிவித்துள்ளது.



    அந்த நீதிபதிகள் மேலும் கூறுகையில், இதைப்போல் தமிழகத்தில் கொரோனாவால் பல தரப்பினர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். ஆனால் மன உளவியல் மருத்துவர்கள் தேவையான அளவு இல்லை. நமக்கு தற்போது உளவியல், மனவியல் வல்லுநர்கள் மற்றும் மருத்துவர்கள் தேவை அதிகமாகவே இருக்கிறது’ என்று தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: