ரஜினியின் 2-வது மகள் மறுமணத்திற்கு காரணம் பெரியார்தான்! அமைச்சர் செல்லூர் ராஜு

இன்று பெண்கள் ஊராட்சி தலைவர்களாக அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் பெரியார் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

ரஜினியின் 2-வது மகள் மறுமணத்திற்கு காரணம் பெரியார்தான்! அமைச்சர் செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு
  • Share this:
ரஜினி தனது இரண்டாவது மகளுக்கு எப்படி மறுமணம் செய்து வைத்தார். பெரியார் தான் அதற்கு காரணம் என்பதை அவர் மறக்க கூடாது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று பெண்கள் ஊராட்சித் தலைவர்களாக அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் பெரியார். பெரியாரை பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மறக்க கூடாது.

ராஜீவ்காந்தியை கிராமத்தில் இருப்பவர்கள் மறக்க கூடாது. கிராம ராஜ்யம் கொண்டு வந்தவர் ராஜீவ்காந்தி தான். இந்த நாட்டுக்காக சேவையாற்றியவர்களில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு. அதை என்னால் மறுக்க முடியாது என தெரிவித்தார்.


மேலும், எது நடந்தாலும் உடனே வாட்ஸ் ஆப்பில் வந்துவிடுகிறது. எனவே ஊராட்சித் தலைவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். ரஜினி தனது இரண்டாவது மகளுக்கு எப்படி மறுமணம் செய்து வைத்தார். பெரியார் தான் அதற்கு காரணம் என்பதை மறக்க கூடாது. பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க :

First published: January 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading