மதுரையில் ஊரடங்கு - சிவகங்கை எல்லையில் குவிந்த குடிமகன்கள்

மாவட்ட எல்லை என்பதால் போலீசாரும், சுகாதார துறையினரும் யார் பணிக்கு வருவது என்கிற குழப்பத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

மதுரையில் ஊரடங்கு - சிவகங்கை எல்லையில் குவிந்த குடிமகன்கள்
குடிமகன்கள் நீண்ட வரிசை நின்று மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்
  • Share this:
மதுரையில் தீவிர ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் சிவகங்கையில் உள்ள டாஸ்மாக் கடையில் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் நீண்ட வரிசை நின்று மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

மதுரையில் ஜூன் 24 முதல் ஜூன் 30 வரை தீவிர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் மதுரையைச் சுற்றியுள்ள சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு குடிமகன்கள் ஆயிரக்கணக்கானோர் படையெடுத்துள்ளனர்.


இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக இடைவேளையின்றி ஒருவரை ஒருவர் முண்டியடித்து தியேட்டரில் டிக்கெட் வாங்குவது போன்று போட்டி போட்டு மதுபானங்களை வாங்கி வருகின்றனர்.

இதன் காரணமாக மதுரையில் தீவிரம் காட்டிய கொரோனா, சிவகங்கை ,விருதுநகர், திண்டுக்கல் எல்லைப் பகுதிகளுக்கும் வேகமாக பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.மதுரை-சிவகங்கை எல்லையிலுள்ள பனையூர் டாஸ்மாக் கடையில் நீண்ட வரிசையில் நின்ற குடிமகன்களால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Also read... டாஸ்மாக் மது விற்பனை கடும் சரிவு - மக்களிடம் பணப்புழக்கம் இல்லாததால் வீழ்ச்சி

மாவட்ட எல்லை என்பதால் போலீசாரும், சுகாதார துறையினரும் யார் பணிக்கு வருவது என்கிற குழப்பத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

இதனால் மதுரை ஒட்டியுள்ள பிற மாவட்டங்களில் எல்லையிலுள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட 300 மடங்கு டாஸ்மாக் விற்பனை நடந்து வருகிறது.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading