மதுரையில் கிராம பெண்களை பயன்படுத்தி ஆன்லைனில் பாலியல் தொழில்: அதிர்ச்சியூட்டும் கள ஆய்வு #News18Special

Youtube Video

தென் மாவட்டங்களில் பெண்களின் வறுமையை பயன்படுத்தி கிராம அளவில் பாலியல் தொழில்கள் நடைபெறுவது நியூஸ்18 நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

  • Share this:
மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வறுமையில் உள்ள பெண்களை பயன்படுத்தி நகரில் இருந்து கிராமம் வரை பாலியல் தொழில் சேவை செய்யும் இணைய சேவை ஒன்றின் சட்டவிரோத செயல் நியூஸ் 18 நடத்திய கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

சட்ட விரோதம் என்றாலும் பலரின் கண்களில் மண்ணை தூவி பாலியல் தொழில் ஆங்காங்கே நடப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பெருநகரங்களில் நடந்து வரும் இந்த பாலியல் தொழில் தற்போது கிராமங்கள் வரை பரவிவிட்டது என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான்.

அதுவும் கிராமங்களில் வறுமையில் வாடும் பெண்களை பயன்படுத்தி குறிப்பாக தென்மாவட்ட பெண்களை இணையவாயிலாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் செயலில் கும்பல் ஒன்று களமிறங்கியிருப்பதாக நியூஸ் 18-க்கு தகவல் கிடைத்தது.

அதன் உண்மை நிலையை கண்டறிய நமது மதுரை செய்தியாளர் குழு களத்தில் இறங்கிய போது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளது. லொக்காண்டோ என்கிற ஜெர்மன் இணையதளம், இணையம் மற்றும் அப்ளிகேஷன் மூலமாக பொருட்கள் வாங்குவது, விற்பது போன்ற சேவையை செய்து வருகிறது.

படிக்க...புதுச்சேரியில்தான் கொரோனா வேகமாக பரவி வருகிறது.. ஜிப்மர் அதிர்ச்சி தகவல்..

அதில் டேட்டிங் என்கிற பெயரில் ஒரு சேவை உள்ளது. அதை தேர்வு செய்தால் தேர்வாளரின் சுய விபரங்கள் கேட்கிறது. அவரது பாலினத்தை பதிவு செய்ததும், அவருடைய தேவை எதுவென்று கேட்கும். பெண் வேண்டுமா? ஆண் வேண்டுமா? அல்லது திருநங்கைகள் வேண்டுமா? என்பது போன்ற கேள்விகளை கேட்பதுடன், அவர்களின் வகைகளையும் தேர்வு செய்ய கூறுகிறது.

இவை அனைத்தும் தேர்வு செய்த பின்பாக, நாம் வசிக்கும் பகுதியின் நிகழ்விடத்தை எடுத்துக் கொண்டு, அந்த பகுதியில் வசிக்கும் பெண்களின் விபரத்தை தொலைபேசி எண்ணுடன் பதிவிட்டுள்ளனர். அந்த எண்ணை தொடர்பு கொண்டால், நாம் தொடர்பு கொள்ளும் எண்ணில் உள்ள வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ரம்யா என்கிற பெயர் கொண்ட வாட்ஸ் அப் எண்ணிலிருந்து சாட் செய்கிறார்கள்.

அதில் நேரடி சேவை என்கிற பெயரில் சாதாரண பெண்களுக்கு 1 மணி நேரத்திற்கு 2,000 ரூபாய், 12 மணி நேரத்திற்கு 6,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே உயர்ரக பெண்கள் என்றால் 1 மணி நேரத்திற்கு 3500 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு 8,500 ரூபாயும் கட்டணம் என கூறகிறார்கள்.

படிக்க...தாய்ப்பால் கூட கொடுக்க் கூடாது: அரியவகை நோயால் அவதிப்படும் ஒன்றரை வயது குழந்தை - அரசு உதவ பெற்றோர்கள் கோரிக்கை


இறுதியாக மாடல் அழகிகளுக்கு 1 மணி நேரத்திற்கு 5,000 ரூபாய் என்றும் 12 மணி நேரத்திற்கு 10,000ரூபாய் என மூன்று பகுதியாக பெண்களை பிரித்து கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர். அவற்றில் ஏதாவது ஒரு பிரிவை நாம் தேர்வு செய்து சாதாரண பெண்களுக்கு 200 ரூபாய், உயர்ரக பெண்களுக்கு 300 ரூபாய், மாடல் அழகிகளுக்கு 400 ரூபாய் என போன்பே மூலம் அந்த எண்ணிற்கு பணம் அனுப்பினால், நம் தேவைக்கு ஏற்ப போட்டோக்கள் அனுப்புகிறார்கள்.

பாலியல் தொழிலுக்கான இணைய சேவை


அதில் ஒரு பெண்ணை  தேர்வு செய்து அனுப்பினால், மேலே குறிப்பிட்ட நேரத்திற்கு ஏற்ப கட்டணத்தை மீண்டும் அனுப்பினால் குறிப்பிடும் இடத்திற்கு சம்பந்தப்பட்ட பெண் வந்து மகிழ்விப்பார் என்று கூறுகிறார்கள். இது தவிர வீடியோ வழியாக பெண்களை நிர்வாணமாக பார்ப்பதற்கும் தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

படிக்க...தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

சாதாரண பெண்கள் என்கிற வரிசையில் வருபவர்கள் பெரும்பாலும் கிராமங்களை சேர்ந்த பெண்களாகவே உள்ளனர். அவர்களின் வறுமையை பயன்படுத்தி இது போன்ற பெயரில் சில இடைத்தரகர்கள் இணைய வழியில் இந்த பாலியல் தொழிலை நடத்தி வருவது தெரியவருகிறது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் இது போன்ற பாலியல் தொழில் நடப்பது திரைமறையானது. ஆனால் மதுரையின் புறநகரான மேலூர், திருமங்கலம், வாடிப்பட்டி போன்ற பகுதிகளிலும் கிராமங்களிலும் இந்த சேவை நடைபெறகிறது என்பதுதான் இதில் அதிர்ச்சியான தகவல்.

படிக்க...சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

 

ஊரடங்கிற்கு பிறகு பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அவ்வாறு வேலை இழந்து வறுமையில் வாடுவோரை குறிவைத்துதான் இந்த பாலியல் தொழில் விரிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிகிறது. உடனடியாக காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தலையிட்டு கிராமப் பெண்களுக்கு வலைவீசும் பாலியல் இடைத்தரகர்களை கைது செய்வதுடன் ,சம்மந்தப்பட்ட இணையதளத்தின் இது போன்ற சேவையையும் நீக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Published by:Vaijayanthi S
First published: