பேரரசியின் திருமணத்தையும், மதுரை மாநகரின் பேரழகையும் கண்டுகளியுங்கள்..!

History TV 18ன் சர்வதேச தரம்வாய்ந்த தயாரிப்பில் உருவான ‘மீனாட்சி அம்மன் & தி மார்வெல் ஆஃப் மதுரை’, நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் இன்று இரவு எட்டு மணிக்கும் , ஞாயிறு (நாளை) காலை 7 மணிக்கும் மதியம் 2 மணிக்கும் ஒளிபரப்பாகவிருக்கிறது.

பேரரசியின் திருமணத்தையும், மதுரை மாநகரின் பேரழகையும் கண்டுகளியுங்கள்..!
பேரரசியின் திருமணத்தையும் மதுரை மாநகரின் பேரழகையும் கண்டுகளியுங்கள்
  • Share this:
'கீழ் திசையின் ஏதன்ஸ்' எனப் போற்றப்படும் மதுரை நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவில், இந்தியாவின் மிக அற்புதமான கலைப்படைப்புகளில் ஒன்று. திராவிடக் கட்டடக் கலையின் உச்சமாகப் போற்றப்படும் இந்தக் கோவில், உலகெங்கும் வாழும் சைவ - வைணவ மக்களின் முக்கியமான யாத்திரைத் தலம்.

இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மையின் திருக்கல்யாணமும் அதை ஒட்டிய பிரம்மாண்டமான சித்திரைத் திருவிழாவும் தென்னிந்தியாவின் மிகப் பெரிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்று.

இவ்விழாவின் முதல் இரண்டு வாரக் கொண்டாட்டங்களையும் அதன் பின்னணியையும் சமூக - கலாச்சார முக்கியத்துவத்தையும் உங்களுக்கு வழங்குகிறது நியூஸ் 18 தமிழ்நாடு.


2019-ல் தயாரிக்கப்பட்ட Meenakshi Amman & Marvel of Madurai ஆவணப் படம் சித்திரைத் திருவிழாவில் இதுவரை காண்டிராத காட்சிகளை, புதிய கோணத்தில் வரலாற்றுப் பின்னணியோடு உங்களுக்கு அளிக்கவிருக்கிறது.

பரிபாடலில் பாடப்பட்ட மதுரை நகரத்தின் அமைப்பையும் தோற்றத்தையும் உங்களுக்கு வரலாற்றுப் பின்னணியோடு அறியத் தருகிறது இந்தப் படம்.

17 ஏக்கர் பரப்பில் விரிந்து பரந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலின் கலை மற்றும் கட்டடவியல் அற்புதங்களை ஹை -டெஃபனிஷன் கேமராக்களில் பதிவுசெய்து, உங்களை மெய்மறக்கச் செய்யவிருக்கிறது Meenakshi Amman & Marvel of Madurai.சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான ‘பட்டாபிஷேகம்’, ‘திருக்கல்யாணம்’, ‘தேரோட்டம்’ ஆகியவற்றை நீங்கள் இதுவரை பாராத கோணத்தில், மிக நெருக்கத்தில் படம் பிடித்துக் காட்டுகிறது. வைகை ஆற்றில் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை இதைவிட நெருக்கமாக நீங்கள் பார்த்துவிட முடியாது.

History TV 18ன் சர்வதேச தரம்வாய்ந்த தயாரிப்பில் உருவான ‘மீனாட்சி அம்மன் & தி மார்வெல் ஆஃப் மதுரை’, நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் இன்று இரவு எட்டு மணிக்கும் , ஞாயிறு (நாளை) காலை 7 மணிக்கும் மதியம் 2 மணிக்கும் ஒளிபரப்பாகவிருக்கிறது.
First published: May 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading