நியூஸ் 18 செய்தி எதிரொலி: மதுரை சத்தியமூர்த்தி நகரில் அமைதியை ஏற்படுத்த உட்சட்ட பிரிவு 107 அறிவிப்பு!

பிரச்னைக்குரிய பகுதியில் அமைதியை ஏற்படுத்த முதலில் உட்சட்டம் பிரிவு 107யை அறிவித்து, அமைதி பேச்சு வார்த்தை துவங்கப்படும்.

நியூஸ் 18 செய்தி எதிரொலி: மதுரை சத்தியமூர்த்தி நகரில் அமைதியை ஏற்படுத்த உட்சட்ட பிரிவு 107 அறிவிப்பு!
பிரச்னைக்குரிய பகுதியில் அமைதியை ஏற்படுத்த முதலில் உட்சட்டம் பிரிவு 107யை அறிவித்து, அமைதி பேச்சு வார்த்தை துவங்கப்படும்.
  • News18
  • Last Updated: August 14, 2019, 1:41 PM IST
  • Share this:
மதுரையில் 35 ஆண்டுகளுக்கு முன்பு, மதம் மாறிய 30 குடும்பங்களை ஊரை விட்டு தற்போது ஒதுக்கிவைத்த சம்பவம் குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பான நிலையில், அதன் எதிரொலியாக அந்த கிராமத்தில்  மதுரை கோட்டாட்சியர் உட்சட்டம் பிரிவு 107 யை அறிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பரவை சத்திய மூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் சமூகத்தில் ஒரு தரப்பினர் கிறிஸ்தவ மதம் தழுவியதால் இந்து தரப்பினர் அவர்களை ஒதுக்கி வைத்துள்ளனர். இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு இன்று காலை பிரத்யேக செய்தி வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து மதுரை கோட்டாட்சியரும் உட்கோட்ட நடுவர் முருகானந்தமும் சேர்ந்து குற்றவிசாரணை உட்சட்டம் பிரிவு 107 யை இவ்விவகாரத்தில் நடைமுறைபடுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நியூஸ் 18-க்கு அவர் அளித்த தகவலில், இருதரப்பையும் எச்சரித்துள்ளதாகவும், சட்டப்படியான தீர்வு கிடைக்கும் வரை அமைதி காக்க வலியுறுத்தி உள்ளதாகவும்  கூறினார்.

உட்சட்டம் பிரிவு 107 என்பது என்ன?

பிரச்னைக்குரிய பகுதியில் அமைதியை ஏற்படுத்த முதலில் உட்சட்டம் பிரிவு 107-யை அறிவித்து, அமைதி பேச்சு வார்த்தை துவங்கப்படும். அதுவரை இருதரப்பும் எந்த மோதலிலும் ஈடுபடக்கூடாது என எழுத்து பூர்வமாக வாங்கப்படும். இந்த நடவடிக்கை தோல்வியடைந்தால் பிரிவு 107-யை பயன்படுத்தி கடும் வழக்குகள் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... ஆடு மேய்க்கச் சென்ற சமூக ஆர்வலர் நிர்வாணமாக ஓட ஓட வெட்டி படுகொலை

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்