மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வலியுறுத்தி, ரயில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்று பார்வர்டு பிளாக், முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சிகளும் முக்குலத்தோர் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அத்துடன் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில், தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக இன்று காலை 9 மணியளவில் பார்வர்டு பிளாக் உட்பட முக்குலத்தோர் அமைப்பினர், மதுரை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆயிரக்கணக்கில் கூடினர். பின்னர் தடையை மீறி ரயில் நிலையத்திற்கு உள்ளே சென்று ரயில்களை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது, பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, உள்ளே செல்லவிடாமல் கைது செய்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், கடும் சிரமத்திற்கு இடையே அவர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதேவேளையில், பயணிகளுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.
Also see... தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் சென்னை சிறுவன்!
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.