ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மியான்மரில் சிக்கிய 30 இந்தியர்கள் முதற்கட்டமாக மீட்பு..எம்.பி சு.வெங்கடேசனுக்கு இந்திய தூதர் பதில்!

மியான்மரில் சிக்கிய 30 இந்தியர்கள் முதற்கட்டமாக மீட்பு..எம்.பி சு.வெங்கடேசனுக்கு இந்திய தூதர் பதில்!

மதுரை எம்பி சு வெங்கடேசன்

மதுரை எம்பி சு வெங்கடேசன்

மியான்மரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்பாக எம்பி சு வெங்கடேசனின் கடிதத்திற்கு இந்திய தூதர் உடனடியாக பதில் அளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Madurai, India

  வெளிநாட்டு ஐடி நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய மோசடி நிறுவனத்திடம் ஏமாற்றப்பட்டு மியான்மரில் 4 தமிழர்கள் உள்பட 90 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை விரைந்து மீட்டுத் தரக்கோரி மியான்மர் நாட்டின் இந்திய தூதரிடம் மதுரை எம்பி சு வெங்கடேசன் கடிதம் மூலம் கோரிக்கை வைத்த நிலையில், சு வெங்கடேசனின் கடிதத்திற்கு 24 மணி நேரத்தில் பதில் தந்துள்ளார்.

  இது தொடர்பாக சு வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில் மீட்பு நடவடிக்கை குறித்து கூறுகையில், “இந்தியா மற்றும் பல நாடுகளின் இளைஞர்களை சட்டவிரோதமாக ஏமாற்றி அழைத்து வந்த ஒரு சர்வதேச மோசடி இதில் சம்பந்தப்பட்டுள்ளது. கிடைத்துள்ள தகவலின்படி, மியான்மரின் மியாவாடி பகுதியில் 60 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இந்த மியாவாடி பகுதி மியான்மர் அரசு கட்டுப்பாட்டில் அல்லாமல் ஆயுதம் தாங்கிய இனக்குழுக்களின் செல்வாக்கின் கீழ் உள்ளது. எனவே, மியான்மர் அரசுடன் இணைந்து நிலைமைகளை கவனித்து வருகிறோம். பல்வேறு வழிமுறைகள் வாயிலாக, வணிக சமூக தொடர்புகளைப் பயன்படுத்தி இந்தியர்களை மீட்க முயற்சி செய்து வருகிறோம். இதுவரை மியாவடி பகுதியில் இருந்து 30 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

  மற்றவர்களையும் விரைந்து மீட்க முயற்சி செய்து வருகிறோம்." இவ்வாறு மியான்மருக்கான இந்திய தூதர் பதிலளித்துள்ளார். தனது கடிதத்திற்கு 24 மணி நேரத்தில் பதில் தந்த மியான்மர் இந்தியத் தூதருக்கு நன்றி என சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்.. சர்ச்சையில் சிக்கி நிபந்தனயற்ற மன்னிப்பு கோரினார் சசி தரூர்

  இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய அரசு வெளிநாட்டு வேலைகளை எதிர்நோக்கி செல்லும் நபர்கள், நிறுவனங்களின் உண்மை தன்மையை பல முறை ஆராய்ந்து அவற்றின் பின்னணியை முழுமையாக தெரிந்து கொண்ட பின்னரே தங்களின் ஆவணங்களை வழங்கி பணி செய்ய முன்வர வேண்டும் என எச்சரித்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Myanmar, Su venkatesan