எஸ்பிஐ வங்கி பணியாளர் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களை விட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட கிளர்க் பணியிடங்களுக்கான முதற்கட்ட தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் பொதுப் பிரிவினர், பிசி மற்றும் எஸ்சி பிரிவினருக்கு 62 மதிப்பெண்கள், எஸ்டி பிரிவினருக்கு 59.5 மதிப்பெண்கள், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு (EWS) 57.75 மதிப்பெண்கள் கட் ஆஃப் உள்ளது.
இதனால் உயர் சாதியினரை விட மற்ற பிரிவினர் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்திலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மதுரை எம்.பி. வெங்கடேசன், இட ஒதுக்கீடு அமலாக்கம் பற்றி வெளிப்படையான அணுகுமுறையும் சமூகக் கண்காணிப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தேர்வானவர்கள் பட்டியலை கட் ஆஃப் மதிப்பெண்களோடு ஏன் பொதுவில் வெளியிடக்கூடாது என்று கேட்டுள்ள அவர், இது சம்பந்தமாக சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை, நிதித்துறை அமைச்சகத்தின் பதிலை எதிர்பார்ப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Published by:Rizwan
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.