Home /News /tamil-nadu /

உரிமையாளரின் தீர்மானத்தை திருப்பி அனுப்புகிறார்: ஆளுநர் குறித்து நாடாளுமன்றத்தில் விமர்சனம்

உரிமையாளரின் தீர்மானத்தை திருப்பி அனுப்புகிறார்: ஆளுநர் குறித்து நாடாளுமன்றத்தில் விமர்சனம்

சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்

தமிழகத்தில்  ஒருவர் வாடகை வீட்டில் வசிக்கிறார். அவர் வாடகை செலுத்துவதில்லை. சட்டம் அவருக்கு அந்த சலுகையை வழங்கியுள்ளது. ஆனால், வாடகைக்கு இருக்கும் அவர் உரிமையாளரின் உத்தரவுகளை அறவே மறுக்கிறார். உரிமையாளரின் தீர்மானத்தை திருப்பி அனுப்புகிறார்

மேலும் படிக்கவும் ...
    நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய தமிழக எம்.பி. சு.வெங்கடேசன், “தமிழகத்தில் வாடகைக்கு இருக்கும் ஒருவர் உரிமையாளரின் உத்தரவுகளை அறவே மறுக்கிறார். உரிமையாளரின் தீர்மானத்தை திருப்பி அனுப்புகிறார்” என நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக பேசினார்.

    தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.  சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர்  கடந்த ஒன்றாம் தேதி திருப்பி அனுப்பியுள்ளார்.

    இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியைச் சேர்ந்தவரும் மதுரை எம்.பி.யுமான சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து நேற்று பேசினார்.



    அப்போது, குடியரசுத் தலைவர் உரிமைகளையும் கடமைகளையும் பற்றி பேசியிருந்தார். அதை சார்ந்து பேச இருக்கிறேன். நான் வாடிகை வீட்டில் குடியிருக்கிறேன். வாடகை வீட்டிலிருக்கும் எனக்கு அந்த வீடோ, நிலமோ சொந்தமில்லை. வீட்டின் உரிமையாளரிடம் உரிமையும் கடமையும் உண்டு.  அவரது உரிமையில் நான் தலையிடுவது இல்லை. மதிக்கிறேன்.

    இதையும் படிங்க: நீட் மசோதா தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்


    என்னைப்போல தமிழகத்தில்  ஒருவர் வாடகை வீட்டில் வசிக்கிறார். அவர் வாடகை செலுத்துவதில்லை. சட்டம் அவருக்கு அந்த சலுகையை வழங்கியுள்ளது. ஆனால், வாடகைக்கு இருக்கும் அவர் உரிமையாளரின் உத்தரவுகளை அறவே மறுக்கிறார். உரிமையாளரின் தீர்மானத்தை திருப்பி அனுப்புகிறார். யார் என புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

    மேலும் படிக்க: 18 கேள்விக்கு பதில் சொல்லுங்க.. அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு நாங்க வரல.. பாஜக அண்ணாமலை அதிரடி அறிக்கை


    குற்றவாளிகளின் தண்டனையை குறைக்கவும் ரத்து செய்யவும் அதிகாரம் படைத்த ஒருவர், மக்களாட்சியின் தத்துவத்தை அதிகாரத்தையும் ரத்து செய்ய துணிவது ஜனநாயகத்தின் அவமானம்,  ஆறரை கோடி தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட அவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏழை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் தீர்மானம் என்று கூறுவது ஜனநாயகத்தின் கேலிக்கூத்துஎன்று தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Parliament, Su venkatesan

    அடுத்த செய்தி