முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விவசாயத்துக்கு ரூ.123 லட்சம் கோடியா? மொத்த பட்ஜெட்டே ரூ.34 லட்சம் கோடிதான்... சு.வெங்கடேசன் எம்.பி ட்விட்

விவசாயத்துக்கு ரூ.123 லட்சம் கோடியா? மொத்த பட்ஜெட்டே ரூ.34 லட்சம் கோடிதான்... சு.வெங்கடேசன் எம்.பி ட்விட்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட சட்ட வரைவில், 2014ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது விவசாய துறைக்கு 5 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு திட்டங்களுக்கு  123 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடப்பு ஆண்டில் விவசாயத்துக்கு 123 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக மத்திய அரசின் சட்ட வரைவில் குறிப்பிடப்பட்டதற்கு  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். 2021-22ம் ஆண்டின் மொத்த பட்ஜெட்டே ரூ.34 லட்சம் கோடிதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா இந்த குளிர்காலக் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி, சட்டமசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சட்ட வரைவில், 2014ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது விவசாய துறைக்கு 5 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல், பல்வேறு திட்டங்களுக்கு  123 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 106 லட்சம் கோடி ரூபாய் 11 கோடி விவசாயிகளின் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இந்த கணக்கு தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர்பதிவில், 123 லட்சம் கோடியாம். விவசாயத்திற்கான செலவுகள்! இன்றைய சட்ட வரைவில் கணக்கு. 2021-22 பட்ஜெட்டின் மொத்த செலவினமே 34,83,236 கோடிகள் தான். விவசாயத்துக்கு 1,31,531 கோடிகள்தான். 100 மடங்கு அதிகம் எப்படி? காகிதத்தில் சர்க்கரை என்றால்… சர்க்கரையை விடுங்க, காகிதமாவது இருக்க வேண்டாமா” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மயக்க மருந்து... ஆக்சிஜன் மாஸ்க்... உயிருக்கு போராடிய நல்ல பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்து மீட்ட வனத்துறையினர்!

First published:

Tags: Parliament Session, Su venkatesan