ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜல்லிக்கட்டு: 300 பேருக்கு மட்டுமே அனுமதி.. குவியும் விண்ணப்பம்- என்ன செய்ய போகிறது மாவட்ட நிர்வாகம்

ஜல்லிக்கட்டு: 300 பேருக்கு மட்டுமே அனுமதி.. குவியும் விண்ணப்பம்- என்ன செய்ய போகிறது மாவட்ட நிர்வாகம்

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.  எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இதுவரை  3,900 மாடு உரிமையாளர்களும், 1,600 மாடு பிடி வீரர்களும் என மொத்தம் 5,500 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

  தைப் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14,15,17 ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.  எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

  அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளவுள்ள காளை மாடுகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

  ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடு பிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 5:30 மணிக்கு துவங்கியது. இதன் மூலம் தற்போது வரை 3,900 மாடு உரிமையாளர்களும், 1,600 மாடு பிடி வீரர்களும் என மொத்தம் 5,500 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

  இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு - 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.. மாடுபிடி வீரர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்

  இன்று மாலை 5 மணி வரை முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் உள்ள நிலையில், மேலும் அதிகமான விண்ணப்பங்கள் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, யார் யாருக்கு அனுமதி வழங்குவது, பார்வையாளர்களில் எந்த 150 பேரை தேர்வு செய்வது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யவுள்ளது.

  மேலும் படிங்க: பொங்கல் பண்டிகையையொட்டி பூக்கள் விலை 2 மடங்கு அதிகரிப்பு

  Published by:Murugesh M
  First published:

  Tags: Jallikattu, Madurai, Online, Pongal