ஒரே நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிப்பு.. மதுரையில் 2 மாதத்தில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயால் நாசம்..
ஒரே நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிப்பு.. மதுரையில் 2 மாதத்தில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயால் நாசம்..
பழுது பார்க்கும் கடையில் நிறுத்தி வைத்திருந்த ஐந்துக்கும் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
மதுரையில் வண்டியூர் பகுதியில் பழுது பார்க்கும் கடையில் நிறுத்தி வைத்திருந்த ஐந்துக்கும் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வண்டியூர் பகுதியில் பழனி என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக அதே பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு கடை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி, பொதுமக்கள் உதவியுடன் மீதமுள்ள இருசக்கர வாகனங்களை சேதமடையாமல் மீட்டார்.
பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர், துரிதமாகச் செயல்பட்டு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இருப்பினும் ஐந்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் முழுமையாக எரிந்து நாசமாகின.
இது தொடர்பாக பழனி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் காவல் துறையினர், அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் கடந்த இரண்டு மாதங்களில் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இதுபோன்று மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Rizwan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.