மதுரையில் நகராட்சி பெயரில் போலியாக பில் தயாரித்து கடைகளில் பணம் வசூலிப்பதாக புகார்

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியின் பெயரில் போலி பில்களை கொடுத்து கடைகளின் தலா 200 ரூபாய் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரையில் நகராட்சி பெயரில் போலியாக பில் தயாரித்து கடைகளில் பணம் வசூலிப்பதாக புகார்
போலி பில்
  • News18
  • Last Updated: August 27, 2020, 12:09 PM IST
  • Share this:
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் வர்த்தக ரீதியாக அதிக கடைகள் உள்ளன. கடைகளைத் தேடி வரும் ஐந்துக்கும் மேற்பட்ட குழுவினர் தங்களை மேலூர் நகராட்சி அதிகாரிகள் என கூறிக்கொண்டு காரணம் கூறாமல் 200 ரூபாய் அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலூர் நகராட்சியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ள அந்த ரசீதில் திடக்கழிவு மேலாண்மை சட்ட விதிகளின்படி தண்டம் வசூலிப்பதற்கான ரசீது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் கீழே அபராதத் தொகையில் 200 ரூபாய் என பூர்த்தி செய்து தரும் அவர்கள், அதற்கான காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் எதையும் பூர்த்தி செய்வதில்லை.

சம்பந்தப்பட்ட அந்த ரசீதுகளில் சிலவற்றில் ஆணையாளரின் சீல் இருப்பது போன்றும், பலவற்றில் சீல் இல்லாமலும் உள்ளது. பட்டவர்த்தனமாக போலி பில் எனத் தெரிந்தும், நகராட்சி அதிகாரிகள் என வருவதால் வேறு நடவடிக்கைக்கு பயந்து கேட்கும் 200 ரூபாயைக் கொடுத்து கடைக்காரர்கள் சமாளித்து வருகின்றனர்.


Also read... பாடகர் எஸ்.பி.பி குணமடைய வேண்டி மதுரையில் கூட்டுப் பிரார்த்தனை

நம்பகத்தன்மையற்ற இந்த ரசீது விவகாரம் குறித்து கடைக்காரர்கள் பலரும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்க மேலூர் நகராட்சி ஆணையாளரை பலமுறை தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

மேலூரில் காரணமின்றி போலி பில்கள் மூலம் கடைக்காரர்களிடம் அடாவடியாக நடத்திவரும் இந்த வசூல் மோசடி குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading