மதுரையில் டாஸ்மாக் கடை ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்: பணத்துடன் தப்பியோடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

டாஸ்மாக் கடை உரிமையாளர் மீது கொலைவெறி தாக்குதல்..

மதுரை அலங்காநல்லூர் அருகே அரசு மதுபானக் கடையின் ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு, கல்லாப் பெட்டியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Share this:
மதுரை அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி அரசு மதுபானக் கடையில் டாஸ்மாக் ஊழியர்கள் மது விற்பனையில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது அ.புதுபட்டியைச் சேர்ந்த பிரதீப் மற்றும் அவரது நண்பர்கள் குடிபோதையில் டாஸ்மாக் ஊழியர்களிடம்  தகராறில் ஈடுபட்டு கல்லாப் பெட்டியிலிருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளனர். இதனைத் தடுத்த விற்பனையாளர் சண்முகவேல் மீது கொலை வெறியுடன் தாக்கியுள்ளனர்.

Also read: தொடர் ஆன்லைன் பணமோசடி புகார்கள்.. உடனடி நடவடிக்கை மூலம் பணத்தை மீட்டுக்கொடுத்த சைபர் கிரைம் போலீசார்..தொடர்ந்து மதுபாட்டிலால் அவரின் தலையில் அடித்து மண்டையை உடைத்துவிட்டு, கல்லாவிலிருந்து சுமார் ரூ.7000 பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயமடைந்த டாஸ்மாக் ஊழியரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அலங்காநல்லூர் போலீசார், தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர்.

மேலும், கடந்த மாதம் வாடிப்பட்டி அருகே ஜெமினிபட்டி டாஸ்மாக் கடையின் காவலாளியை கைகால்கள் கட்டபட்ட நிலையில், மர்ம நபர்கள் கொலை செய்து கிணற்றில் வீசிச் சென்றனர். இப்படி வாடிப்பட்டி அலங்காநல்லூர் பகுதியில் டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு  வருவதால் ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.
Published by:Rizwan
First published: