அண்ணாவின் கருத்தைதான் ரஜினியும் சொல்லியிருக்கிறார்! காஷ்மீர் விவகாரத்தில் செல்லூர் ராஜூ விளக்கம்

அத்திவரதர் குளத்திற்குள் வைத்து வழிபடுவதா, கோவிலில் வைத்து வழிபடுவதா என்பது குறித்து இந்து சமய பெரியோர்கள் வகுத்துள்ள சம்ரதாயம், சாஸ்திரபடி முடிவு செய்யப்படும்.

அண்ணாவின் கருத்தைதான் ரஜினியும் சொல்லியிருக்கிறார்! காஷ்மீர் விவகாரத்தில் செல்லூர் ராஜூ விளக்கம்
அமைச்சர் செல்லூர் ராஜூ
  • News18
  • Last Updated: August 16, 2019, 2:19 PM IST
  • Share this:
நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை அரசியலாக்க கூடாது என்ற ரஜினியின் கருத்து பேரறிஞர் அண்ணா ஏற்கனவே கூறியதுதான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை மாநகராட்சியில் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணி மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 புதிய அங்கன்வாடியை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று  திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை அரசியலாக்க கூடாது என்ற ரஜினியின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ’நாட்டின் பாதுகாப்பு ஒற்றுமையை கருத்தில் கொண்டுதான் ரஜினி கருத்து கூறி இருக்கிறார். ரஜினிகாந்த் கூறிய அதே கருத்தை பேரறிஞர் அண்ணா ஏற்கனவே கூறியுள்ளார்.


1962-ல் சீனா படையெடுத்தபோது திராவிட நாடு கொள்கையை ஒத்திவைப்பதாக அண்ணா தெரிவித்திருக்கிறார். அதைத்தான் ஜினி அவரது பாணியில் சொல்லியிருக்கிறார். ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்தார்.

மதுரையில் நடந்த மதம் மாறிய விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், ”அந்த விவகாரம் இதுவரை தனது கவனத்திற்கு வரவில்லை. இருப்பினும் இரு தரப்பு மக்கள் ஒற்றுமையுடன் இருக்க சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சனையை களைய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அதன்பின்னர் அத்திவரதர் தரிசனம் நீட்டிப்பு குறித்த கேள்விக்கு, ’அத்திவரதரை குளத்திற்குள் வைத்து வழிபடுவதா, கோவிலில் வைத்து வழிபடுவதா என்பது குறித்து இந்து சமய பெரியோர்களின் வகுத்துள்ள சம்பரதாயம், சாஸ்திரபடி முடிவு செய்யப்படுகிறது. அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என்பது இந்து மக்களின் விருப்பமாக இருந்தாலும் சம்பரதாய, சாஸ்திரப்படிதான் முடிவு செய்யப்படும்” என்றார்.மாணவர்கள் கயிறு கட்டுவது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், “ இது தொடர்பான விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

மேலும் படிக்க... ரஜினிக்கு ஆதரவும்... எதிர்ப்பும்...

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்