தொண்டர்களை நம்பியே அதிமுக செயல்படுகிறது - அமைச்சர் செல்லூர் ராஜு

தலைவர்களை மட்டும் அல்ல; தொண்டர்களை நம்பியே அதிமுக உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்

தொண்டர்களை நம்பியே அதிமுக செயல்படுகிறது - அமைச்சர் செல்லூர் ராஜு
அமைச்சர் செல்லூர் ராஜு
  • Share this:
மதுரையில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுரையை நிச்சயமாக இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும் என்றும் தலைநகராக சென்னை இருந்தாலும் இது அரசியல் முடிவை தீர்மானிக்கும் என்றார்.

மதுரையை தலைநகராக வேண்டும் என்பது எம்ஜிஆரின் ஆசை. அதனால்தான் உலகத் தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்தினார். உலகத் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் துவக்கினார். முதல்வரும் துணை முதல்வரும் சேர்ந்து மதுரையை இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும். நிச்சயமாக இருவரும் அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க...திருச்சி தலைநகரமானால் எட்டு மாவட்டங்களுக்கு பலன்கள் கிடைக்கும் - அரசியல் விமர்சகர் கருத்து


மேலும், அரசும், கட்சியும் கட்டுப்பாடாக உள்ளது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்காக பாஜக தலைவர் சில கருத்துக்களை கூறி வருகிறார். தோழமை கட்சிக்கு உரிய மரியாதையை நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மத்திய, மாநில அரசுக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்த நினைப்பது தவறு என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மேலும் படிக்க...மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜூதொடர்ந்து பேசிய அமைச்சர், இப்போதுவரை பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது. தேர்தல் நேரத்தில் தலைவர்கள் முடிவெடுப்பார்கள்.  தலைவர்களை மட்டும் அல்ல; தொண்டர்களை நம்பியே அதிமுக உள்ளது என்றும் தெரிவித்தார்.
First published: August 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading