போகிறபோக்கில் கொரோனா டச் பண்ணிவிட்டு போய்விட்டது: வடிவேலு பாணியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு..

போகிறபோக்கில் கொரோனா டச் பண்ணிவிட்டு போய்விட்டதாக நடிகர் வடிவேலு பாணியில் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தது அதிமுகவினரிடையே கலகலப்பை ஏற்படுத்தியது.

போகிறபோக்கில் கொரோனா டச் பண்ணிவிட்டு போய்விட்டது: வடிவேலு பாணியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு..
அமைச்சர் செல்லூர் ராஜு
  • Share this:
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மதுரை திரும்பிய அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகம் முன்பு அக்கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர் .

அப்போது அதிமுகவினர் கும்பலாக கூடியதால் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும்படி அமைச்சர் அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், தானும், தனது மனைவியும் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்துவிட்டதாகவும், இன்று முதல் பொதுப்பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறினார் .

மேலும் படிக்க...11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது..


அதன்பிறகு நடிகர் வடிவேலு பாணியில் போகிறபோக்கில் கொரோனா டச் பண்ணிவிட்டு போய்விட்டதாக அவர் கூறினார்.இது  அங்கு கூடியிருந்த அதிமுகவினரிடையே  மகிழ்ச்சியையும் சிரிப்பையும் ஏற்படுத்தியது.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading