அன்னதான நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.. பிரியாணிக்காக 5 மணி நேரம் காத்திருந்த மக்கள்

அன்னதான நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.. பிரியாணிக்காக 5 மணி நேரம் காத்திருந்த மக்கள்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் - கோப்புப் படம்
  • Share this:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருகைக்காக 5 மணி நேரம் காத்திருந்து பொதுமக்கள் பிரியாணி சாப்பிட்டனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் இம்மாதம் முழுவதும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் சைவம், அசைவ உணவுகள் மாறி மாறி பரிமாறப்படுகின்றன.

இந்நிலையில் திருமங்கலம் அடுத்த கல்லுப்பட்டியில் நேற்று பிரியாணி வழங்க அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காலை 9 மணிக்கு தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக முதியவர், பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் காலை முதல் பந்தியில் அமர்ந்து காத்திருந்தனர். எனினும் நேரம் செல்ல செல்ல அமைச்சர் வராததால் பொதுமக்கள் பசியுடன் காத்திருந்தனர்.


பின்னர் 12 மணி அளவில் அமைச்சர் வந்து கொண்டிருக்கிறார் என்று தகவல் வந்ததை அடுத்து மேசையின் மீது காகிதம் விரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இலை போடப்பட்டு, தண்ணீர் வைக்கப்பட்டது. அப்போதும் அமைச்சர் வராததால், அங்கிருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எழுந்து சென்றால் இடம்போகிவிடும் என்பதால், அனைவரும் அங்கேயே காத்துக் கொண்டிருந்தனர்.

பின்னர் சரியாக ஒன்று முப்பது மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருகை தந்தார். இதையடுத்து அவசர, அவசரமாக அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் அங்கு இருந்து புறப்பட்டுச் சென்றார். ஒருவேளை உணவுக்காக 5 மணி நேரம் காத்திருந்து பொதுமக்கள் பிரியாணி சாப்பிட்டனர். ஐந்து நிமிட நிகழ்ச்சிக்காக 5 மணிநேரம் காத்திருந்தது கல்லுப்பட்டி மக்களிடையே பெரும் வேதனையை உண்டாக்கியது.

 
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்