பக்தர்கள் இல்லாமல் நடந்து முடிந்த மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்!

பக்தர்கள் இல்லாமல் நடந்து முடிந்த மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்!

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

பக்தர்கள் இல்லாமல் இந்த ஆண்டும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்து முடிந்தது.

 • Share this:
  பக்தர்கள் இல்லாமல் இந்த ஆண்டும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்து முடிந்தது.

  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றது. அந்த வகையில் இந்த வருட சித்திரை திருவிழா, கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பக்தர்கள் இன்றி நேற்று, திக் விஜயம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

  இந்நிலையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. இதில் 4 சிவாச்சாரியார்கள் திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனர். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டும் மீனாட்சி திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதே நேரத்தில் பக்தர்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் மதுரை மீனாட்சி யூடியூப் சேனலிலும், இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்திலும் அது ஒளிபரப்பப்பட்டது.

  திருக்கல்யாண நிகழ்வு மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சேத்தி மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக பல வண்ண மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டு, உற்சவர் சன்னதியில் இருக்கும் திருவாட்சியில் உள்ள 108 விளக்குகள் ஏற்றப்பட்டன. மீனாட்சி அம்மன் மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டார். வைரகிரீடம் சூடி, மரகத மூக்குத்தி, வைர மாலை மற்றும் பல வண்ண கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டன. சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சிவப்பு பட்டு உடுத்தி மணமேடையில் எழுந்தருளினர்.

  ஆண்டு தோறும் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகையில், பெண்கள் புதிய மாங்கல்யத்தை மாற்றிக் கொள்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஆன்லைனில் மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்தைப் பார்த்தவாரு வீட்டிலேயே வைத்து மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: