மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சியில், சமஸ்கிருதத்தில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட சர்ச்சையைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை மருத்துவ கல்லூரியின் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான வரவேற்பு விழா நேற்று (சனிக்கிழமை) நடந்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டீன் ரத்தினவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றனர்.இதனால் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். நடைமுறையில் இல்லாத இந்த உறுதி மொழி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்த நிகழ்விற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, உறுதிமொழி ஏற்பு தொடர்பாக மருத்துவ கல்லூரி முதல்வருக்கு மருத்துவ கல்லூரி இயக்குனரகம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
இதையும் படிங்க - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை பயணம்.. சீதை கோவிலில் தரிசனம்
இது குறித்து மதுரை மருத்துவ கல்லூரி டீன் ரத்தின வேல் கூறுகையில், நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனையில் இருந்தோம். மாணவர் சங்க தலைவர் எங்கள்,கவனத்திற்கு கொண்டு வராமலே, யூடியூபில் வந்த மஹரிஷி சரக் சபாத் சமஸ்கிருத மொழியில் உள்ள உறுதி மொழியை ஆங்கிலப்படுத்தி எடுத்து விட்டனர். எங்களுக்கே தெரியாது என கூறினார்.
எது எப்படியோ, மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் வரவேற்பு நிகழ்வில் நிகழ்ச்சி நிரலில் இதுவரை இல்லாத வகையில், சமஸ்கிருத மொழியில் உள்ள உறுதி மொழியை எடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.