கொரோனா விழிப்புணர்வூட்ட மதுரையில் 'மாஸ்க்' புரோட்டா அறிமுகம்

பொது மக்களுக்கு முகக்கவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மதுரையில் பிரபல உணவகம் ஒன்று 'மாஸ்க்' புரோட்டாவை அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா விழிப்புணர்வூட்ட மதுரையில் 'மாஸ்க்' புரோட்டா அறிமுகம்
மாஸ்க் பரோட்டா.
  • Share this:
கொரோனா தொற்று பரவிய நாளிலிருந்து அதுதொடர்பான விழிப்புணர்வு பல்வேறு மட்டத்திலிருந்து வந்து கொண்டே உள்ளன. அந்த வகையில் மதுரையில் பிரசித்திபெற்ற உணவகமான டெம்பிள் சிட்டி ஹோட்டலில் 'மாஸ்க்' புரோட்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் புரோட்டா பிரியர்கள் அதிகம் என்பதால் அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மக்களிடம் எளிதில் சென்றடையும் எனக் கருதி அதன் உரிமையாளர் குமார் இந்த மாஸ்க் புரோட்டாவை அறிமுகம் செய்துள்ளதாகக் கூறுகிறார்.

மேலும், எப்போதும் வித்தியாசமாகச் சிந்திக்கும் மதுரை மக்களிடம் இந்த மாஸ்க் புரோட்டா விழிப்புணர்வை மட்டுமல்லாமல் ருசியிலும் தனக்கென தனி முத்திரை பதிக்கும் எனப் புரோட்டா பிரியர்கள் கூறுகின்றனர்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading