• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரையில் கந்துவட்டிக் கொடுமையால் வீடியோ வெளியிட்டு இளைஞர் தற்கொலை - 4 பேர் கைது

மதுரையில் கந்துவட்டிக் கொடுமையால் வீடியோ வெளியிட்டு இளைஞர் தற்கொலை - 4 பேர் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரையில் கந்துவட்டிக் கொடுமையால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர்.

  • Share this:
    மதுரை மகபூப்பாளையத்தை சேர்ந்த 37 வயது இளைஞர் முஹம்மது அலி. உணவகம் நடத்திவரும் இவர், உணவகத்தை மேம்படுத்துவதற்காக செல்வக்குமார் என்பவரிடம் 5 லட்ச ரூபாய்வரை கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக உணவகத்தைத் திறக்க முடியாமல் வாழ்வாதாரம் இழந்த நிலையில் வட்டி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

    இருப்பினும், முகம்மது அலியிடம் கூடுதல் வட்டி கேட்டு செல்வகுமார் தொந்தரவு செய்துள்ளார். அதனால், மிகுந்த மனவேதனையில் இருந்த முகம்மது தன் துயரங்களை வீடியோவாக வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அந்த வீடியோவில் பேசிய முகம்மது, ‘வழக்கறிஞர் செல்வகுமார் என்பவரிடம் 5 லட்சம் கடன் வாங்கிய நிலையில் 6 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்தியும் கூடுதலாக பணம் கேட்டு தொல்லை செய்து வருகின்றனர்.

    என்னால் இதை சுத்தமாக சமாளிக்க முடியவில்லை, வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளை அவதூறாக பேசுகிறார்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றனர். என்னுடைய இந்த சாவிற்கு வழக்கறிஞர் செல்வக்குமார், ஜெயேந்திர சிங், காமாட்சி மற்றும் மாரிமுத்து ஆகியோர் தான் முக்கிய காரணம். மேலும், என்னோடு முடியட்டும் இந்த கொடுமை வேறு யாரும் இது போன்ற கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்யும் நிலை வரக்கூடாது, மாநகர காவல்துறை ஆணையர் அவர்களே நடவடிக்கை எடுங்கள்.

    மக்களின் குறைகளை தீர்த்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்களே என்னுடைய குடும்பத்தின் குறைகளையும் தீர்த்து வையுங்கள், என்னுடைய மனைவி குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குங்கள் முதல்வரே’ என்று 8 நிமிட வீடியோவில் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். இந்த வீடியோ தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தநிலையில், முஹம்மது அலியின் மனைவி பாத்திமா அளித்த புகாரின் அடிப்படையிலும், உயிரிழந்த இளைஞர் வெளியிட்ட ஆதாரத்தின் அடிப்படையிலும் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார், கோச்சடையைச் சேர்ந்த காமாட்சி, வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயந்திர சிங் ஆகிய 4 பேர் மீது எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் கந்துவட்டி தடுப்பு பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: