மாணவர்களின் மனிதக் கடவுளே! மதுரையிலும் முதலமைச்சருக்காக போஸ்டர் ஒட்டிய அரியர் மாணவர்கள்

மதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மனித கடவுளே என மாணவ அமைப்பினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

மாணவர்களின் மனிதக் கடவுளே! மதுரையிலும் முதலமைச்சருக்காக போஸ்டர் ஒட்டிய அரியர் மாணவர்கள்
மாணவர்களின் மனிதக் கடவுளே!
  • News18 Tamil
  • Last Updated: September 3, 2020, 10:24 PM IST
  • Share this:
கொரோனா வைரஸ் பரவல் காரணமான கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளைத் தவிர்த்து மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், அரியர் தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியடைந்ததாக தமிழக அரசு அறிவித்தது.

இதனை வரவேற்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.  தொடர்ந்து மதுரையிலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மனித கடவுளே என மாணவர்கள் சிலர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்



மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களின் மனித கடவுளே எங்கள் ஓட்டு உங்களுக்கே என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ளது.



அந்த போஸ்டரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாணவர்கள் ஒன்றிணைந்து நன்றி செலுத்துவது போன்ற புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.
First published: September 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading