டிக்கெட் இன்றி ரயில் பயணம்: மதுரை கோட்டத்தில் மட்டும் ₹5.63 கோடி அபராதம் வசூல்

டிக்கெட் இன்றி ரயில் பயணம்: மதுரை கோட்டத்தில் மட்டும் ₹5.63 கோடி அபராதம் வசூல்
  • Share this:
மதுரை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்களிடம் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் 5 கோடியே 63 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 13 ஆயிரத்து 186 பேர், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததாகவும் அவர்களிடம் இருந்து 75 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மதுரை கோட்டத்தில் 2019-20ம் ஆண்டு டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 89 ஆயிரத்து 917 பேரிடம் இருந்து 5 கோடியே 63 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து டிக்கெட் பரிசோதகர்கள் தங்களது பணியை தீவிரப்படுத்த வேண்டும் என மதுரை கோட்ட மேலாளர் லெனின் உத்தரவிட்டுள்ளார்.
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்