பேஸ்புக் மூலம் சிறுமிக்கு காதல் வலை - ஊரடங்கில் கடத்திச் சென்று லாட்ஜில் தங்கியிருந்த இளைஞர் கைது

சிறுமிக்கு பேஸ்புக் மூலம் காதல் வலை வீசி பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்ற இளைஞரை திண்டுக்கல் லாட்ஜில் வைத்து மதுரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பேஸ்புக் மூலம் சிறுமிக்கு காதல் வலை - ஊரடங்கில் கடத்திச் சென்று லாட்ஜில் தங்கியிருந்த இளைஞர் கைது
சிறுமியை கடத்தி சென்ற இளைஞர்
  • Share this:
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவர் 22 வயதான முகமது ஷபின். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினராக அறியப்படுகிறார். பேஸ்புக்கில் ஆக்டிவாக இருக்கும் இவர், அதே தளத்தில் கணக்கு வைத்திருக்கும் சிறுமிகளை நோட்டமிட்டு, அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஆசைக்கு இணங்க வைக்கும் தூண்டில் வீசுவதை வழக்கமாக செய்து வந்துள்ளார்.

இவரது தூண்டிலில் மதுரையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் சமீபத்தில் விழுந்துள்ளார். பேஸ்புக் மூலம் தனது காதலை வெளிப்படுத்திய ஷபின், சாட்டிங் மூலம் அந்த சிறுமிக்கு பாலியல் எண்ணத்தை உருவாக்கியுள்ளார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் சிறுமியை மூளைச் சலவை செய்து வெளியூருக்கு அழைத்து செல்ல திட்டம் தீட்டிய ஷபின், அதன் படி நத்தத்திலிருந்து பைக் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.


Also read... சென்னையில் 110 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்

சிறுமியை காணாத அவரது பெற்றோர் மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் அனுராதா மனோகரி, எஸ்.ஐ., சாந்தி தலைமையிலான தனிப்படை ஷபினின் மொபைல் எண்ணை வைத்து அவரை பின் தொடர துவங்கினர். பொள்ளாச்சியில் அவர்கள் இருப்பது தெரிந்து அங்கு சென்ற போது, அங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல் வந்தனர்.பின் செல்போன் டவர் மூலம் திண்டுக்கல் வந்த தனிப்படையினர், அங்குள்ள லாட்ஜில் சிறுமி உடன் இருந்த ஷபினை கையும் களவுமாக பிடித்தனர். பின் அவர்களிடம் விசாரித்ததில் வர மறுத்த சிறுமியை கட்டாயப்படுத்தி ஷபின் அழைத்து சென்றதும், மதுரையிலிருந்து பைக்கிலேயே பொள்ளாச்சி, திண்டுக்கல் என பல்வேறு ஊர்களுக்கு சென்று, ஊரடங்கு காலத்திலும் ஊர் சுற்றியதும், தடைகளை மீறி லாட்ஜ்களில் கூடுதல் பணம் கொடுத்து தங்கியதும் தெரியவந்தது.இதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், ஷபினை போக்சோ சட்டத்தில்  கைது செய்தனர். மேலும் அவரால் வேறு சிறுமிகள் யாரோனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading