மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது

13 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

news18
Updated: April 17, 2019, 10:10 AM IST
மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது
மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
news18
Updated: April 17, 2019, 10:10 AM IST
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் 10-ம் நாள் விழாவான இன்று மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா இன்று நடந்தது.

திருக்கல்யாணத்தை ஒட்டி வடக்கு மற்றும் மேற்கு ஆடி வீதி சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள திருக்கல்யாண மேடை சுமார் ஒன்றரை டன் எடை கொண்ட வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திருக்கல்யாணத்தைக் காண மொத்தம் 13 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, 3200 பேர் கட்டணமில்லா தரிசனத்திலும் 6800 பேர் ரூ 200, ரூ 500 கட்டணத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவில் வெளி பிராகாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

பக்தர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இந்து அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

கோவில் வளாகத்தைச் சுற்றி திருக்கல்யாண விழாவைக் காணொளியில் காணும் வகையில் 20  அகண்ட எல்.ஈ.டி ஒளித்திரை அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பணியில் 2500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கோவிலைச் சுற்றி 100 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும், 9 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்ட விழா நாளையும், கள்ளழகர் வைகையாற்றிலிறங்கும் நிகழ்வு வரும் 19ம் தேதியும் நடைபெறவுள்ளது.

Also Watch :  தமிழகம், புதுவையில் நேற்று மாலையுடன் ஓய்ந்தது பிரசாரம்!

First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...