மதுரை மருத்துவக் கல்லூரியில் ’ராகிங்கை’ தடுக்க கடும் கெடுபிடி...

ராகிங் புகார் வரும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: August 1, 2019, 9:32 PM IST
மதுரை மருத்துவக் கல்லூரியில் ’ராகிங்கை’ தடுக்க கடும் கெடுபிடி...
ராகிங் புகார் வரும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Web Desk | news18
Updated: August 1, 2019, 9:32 PM IST
மதுரை மருத்துவ கல்லூரியில் கடந்த ஆண்டு ராகிங் செய்து 16 மாணவர்கள் சஸ்பெண்ட் ஆனதை தொடர்ந்து இம்முறை பல்வேறு கெடுபிடிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் துவங்கின.

கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் 'ராகிங்' செய்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.


அந்த சம்பவம் தொடர்பாக 16 மாணவர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இந்த விவகாரம், டெல்லி மனித உரிமை ஆணையம் வரை சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அதுபோல் 'ராகிங்' சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் கல்லூரி வளாகம், வகுப்பறைகள் மற்றும் விடுதியில் கல்லூரி நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Loading...

முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் பெரும்பாலும் விடுதியில் தங்கிதான் படிக்கின்றனர். விடுதியில் 'ராகிங்' நடக்காமல் இருக்க முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான விடுதி கீழ்த்தளத்தில் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

விடுதியில் நுழைவதற்கு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தனிவாசல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாசல் வழியாக சீனியர் மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மீறி சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 'ராகிங்' கமிட்டிக்கு 'டீன்' பரிந்துரை செய்வார்.

விடுதி வளாகம், கல்லூரி வளாகம், விடுதி அறை வாசல்கள் உள்பட அனைத்து நுழைவு வாயில் பகுதிகளிலும் கண்காணிக்க சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ராகிங் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கவும், அது தொடர்பான புகார்களை விசாரிக்கவும் டீன் வனிதா தலைமையில் தனி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ராகிங் புகார் வரும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Also watch:  செருப்பால் அடித்ததால் ஆத்திரம்.. பெண்ணை கொன்ற அத்தை மகன்

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...