கிரானைட் வழக்கில் மதுரை முன்னாள் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து

கிரானைட் வழக்கில் மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கிரானைட் வழக்கில் மதுரை முன்னாள் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து
மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா (படம்: Facebook)
  • Share this:
மதுரையில் தனியார் நிலத்தில் உள்ள கிரானைட் கற்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்ததாக பி.ஆர்.பழனிசாமி, அவரது மகன் சுரேஷ் குமார் உட்பட 3 பேர் மீது அப்போதைய மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா கடந்த 2013ம் ஆண்டு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

எனினும் 2016ம் ஆண்டு மேலூர் நீதிமன்ற நீதிபதி மகேந்திரபூபதி வழக்கில் இருந்து மூவரைவும் விடுதலை செய்தார். மேலும் ஆதாரம் இல்லாமல் , ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாகவும், அதனால் இருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.

Also read: ஊரடங்கால் தொழிலை இழந்து தவித்தவருக்கு புதிய தொழில் தொடங்க உதவிய மாணவிகள்


இதற்கு அதிருப்தி தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கீழமை நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவையும் ரத்து செய்வதாக குறிப்பிட்டார். இதுதொடர்பான வழக்கை, கனிம வளம் குறித்து விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றிய நீதிபதி புகழேந்தி வழக்கை 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
First published: August 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading