இஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் மீன்வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி... வேலைதேடுவோருக்கு ஊக்கமளிக்கும் இளைஞர்!

இஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் மீன்வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி... வேலைதேடுவோருக்கு ஊக்கமளிக்கும் இளைஞர்!
பட்டதாரி சத்திய சொரூபன்.
  • Share this:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பி.டெக். பட்டதாரி, வேலைதேடும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார். 

மீன்வளர்ப்பு மிகவும் லாபம் தரக்கூடிய தொழில்களில் ஒன்று. இதற்கு குளம், ஊருணி, பண்ணை குட்டை போன்றவை தேவை என மீன்வளர்ப்போர் கூறி வரும் நிலையில், அதெல்லாம் தேவையில்லை. வெறும் 200 சதுர நிலம் இருந்தாலே போதும் என்கிறார் சத்திய சொரூபன்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாலிசந்தை கிராமத்தைச் சேர்ந்த இவர் ஒரு பி.டெக். பட்டதாரி. படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காத நிலையில், என்ன தொழில் செய்யலாம் என யூடியூப்பில் தேடியபோது கிடைத்துள்ளது இஸ்ரேலிய முறையில் மீன்வளர்ப்புத் தொழில். யூ டியூப்பில் கொடுக்கப்பட்ட விவரங்களை சேகரித்துக் கொண்டு களமிறங்கிய இவர், தற்போது மீன் வளர்ப்பில் மட்டுமல்லாமல், பிறருக்கு கற்றுக் கொடுக்கும் வகுப்புகளையும் நடத்தி வருகிறார். குறைந்த அளவு இடத்தில், குறைந்த அளவு நீரில் மீன்வளர்ப்புத் தொழிலை செய்ய முடியும் என்கிறார் சத்திய சொரூபன்.


இஸ்ரேலிய முறை மீன் வளர்ப்பில் 6 மாதங்களில் நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் கூறும் இவர், ஆண்டு முழுவதும் இந்த தொழிலில் லாபம் பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கிறார். வேலையில்லாத இளைஞர்கள் மட்டுமின்றி, வீட்டில் இருக்கும் பெண்கள் கூட இதைக் கற்றுக் கொண்டால், ஓய்வு நேரத்திலேயே பல்லாயிரம் ரூபாய் வருமானம் பார்க்கலாம் என்றும் கூறுகிறார் சத்திய சொரூபன்.
First published: February 21, 2020, 9:33 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading