விற்பனைக்கு அனுப்ப முடியாத பூக்களை சாமி சிலைகளில் கொட்டும் விவசாயிகள்!

விற்பனைக்கு அனுப்ப முடியாத பூக்களை சாமி சிலைகளில் கொட்டும் விவசாயிகள்!
பூக்களை சாமி சிலையில் கொட்டும் விவசாயி
  • Share this:
மதுரையில் பறித்து விற்பனைக்கு அனுப்ப முடியாத மல்லிகைப் பூக்களை சாமி சிலைகள் மீது விவசாயிகள் கொட்டினார்.

ஊரடங்கு காரணமாக பல்வேறு விவசாய தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தான், கச்சிராயிருப்பு, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதானமாக மல்லிகைப்பூ விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

தினந்தோறும் பறிக்கப்படும் மல்லிகைப் பூக்கள் மதுரை பூ சந்தைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தமிழகம் முழுவதும் விற்பனைக்கு செல்வது வழக்கம். ஊரடங்கு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் மல்லிகைப் பூக்களை விற்பனைக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டது.


இதனால் கடந்த சில நாட்களாகவே பூக்கள் பறிப்பதை விவசாயிகள் தவிர்த்து வந்தனர். இதனால் பூக்கள், உதிர்ந்து குப்பைகளாக சேர தொடங்கியதைத் தொடர்ந்து அதை தவிர்க்கும் விதமாக மல்லிகைப் பூக்களை பறிக்க துவங்கிய விவசாயிகள் அவற்றை அருகில் உள்ள கோயில்களுக்கு கொண்டு சென்று சுவாமி சிலைகள் மீது கொட்டிச் சென்றனர்.

மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட பூக்களால் தங்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also see...
First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading