மதுரை இரட்டைக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கொலையின் பின்னணி என்ன?

மதுரை அருகே நடந்த இரட்டைப் படுகொலையில் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் தம்பி மற்றும் அவரது நண்பர் ஆகியோர் தான் இரட்டைக் கொலையின் முக்கிய குற்றவாளிகள் என போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரட்டைக் கொலைகளின் உண்மையான காரணம் என்ன?

  • Share this:
மதுரை மாவட்டம் குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ண ராஜன் மற்றும் ஊராட்சி பணியாளர் முனியசாமி ஆகியோர் கடந்த 12-ஆம் தேதி குன்னத்தூர் அருகே மலையடிவாரத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் போதிய துப்பு கிடைக்காத நிலையில் ஊராட்சி செயலாளர் பணியிடத்தை வேறு ஒருவருக்கு வழங்க ஊராட்சி தலைவர் கிருஷ்ணராஜன் முடிவு செய்ததாகவும் அதனால் ஊராட்சி செயலாளர் வீரணன் மற்றும் முன்னாள் ஊராட்சித் தலைவர் திருப்பதி ஆகியோர் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று கொலையானவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து, இருவர் மீதும் கருப்பாயூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கொலையானவர்களின் இறுதிச் சடங்கிற்கு வந்த ஒரு தரப்பினர் ஊராட்சி செயலாளர் வீரணன் மற்றும் முன்னாள் ஊராட்சித் தலைவர் திருப்பதி ஆகியோரின் வீடுகளை சூறையாடி தீக்கிரையாக்கினர்.

விசாரணையில், இருவரும் தங்களுக்கு அந்த சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. அதனால், வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா என போலீஸ் தரப்பில் தீவிரமாக விசாரணை செய்து வந்த நிலையில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் தம்பி செந்திலுக்கும் கொலையான கிருஷ்ண ராஜனுக்கும் தேர்தல் முன்பகை இருந்தது தெரியவந்தது


செந்திலின் மனைவி உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைய கிருஷ்ணராஜன் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல குவாரிகளில் உள்ள கழிவு கற்களை எடுத்து விற்பதற்கு பாலகுருவிற்கு உதவுவதாக கிருஷ்ணராஜன் உறுதியளித்த நிலையில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அவரின் மனைவியுடன் கிருஷ்ணராஜன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு இரு வேறு காரணங்களுக்காக ஆத்திரத்தில் இருந்த இருவரும் ஒன்றிணைந்து கிருஷ்ணராஜனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பொழுது, ஊராட்சி செயலாளர் மாற்றம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

மேலும் படிக்க..சென்னை தியாகார நகரில் 4.50 கிலோ தங்கம் கொள்ளை.. கள்ளக்காதலியால் குற்றவாளி சிக்கியது எப்படி..?அதை பயன்படுத்தி கொலை செய்தால் பழி வேறொருவர் மீது விழும் எனத் திட்டமிட்டு சம்பவத்தன்று இரவு மது அருந்திக் கொண்டிருந்த கிருஷ்ணராஜன் மற்றும் முனியசாமியை செந்தில், பாலகுரு இணைந்து கொலை செய்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

இதைத் தொடர்ந்து செந்தில் மற்றும் பாலகுரு இருவரையும் கருப்பாயூரணி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஊராட்சி செயலர் வீரணன் மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர் திருப்பதி ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்தனர்.
First published: October 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading