மதுரையில் அரசு மருத்துவர் விஷ ஊசி போட்டு தற்கொலை

News18 Tamil
Updated: September 13, 2019, 1:16 PM IST
மதுரையில் அரசு மருத்துவர் விஷ ஊசி போட்டு தற்கொலை
News18 Tamil
Updated: September 13, 2019, 1:16 PM IST
மதுரையில் அரசு மருத்துவர் விஷ ஊசி போட்டு கொண்டு தற்கொலை செய்த சம்பவம் மருத்துவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றி வருபவர் 29 வயதான உதயராஜ். விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ், கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றி வந்தார். மதிச்சியம் பகுதியில் அறை எடுத்து நண்பர்களுடன் வசித்து வந்த மருத்துவர் உதயராஜ், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

வழக்கம் போல நேற்று மருத்துவமனைக்கு சென்றுவிட்டு அறைக்கு திரும்பிய உதயராஜ், நள்ளிரவு தனக்குத் தானே விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது நண்பர்கள் தகவலின் பேரில் மதிச்சியம் பகுதிக்கு சென்ற போலீசார், மருத்துவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், வழக்குப்பதிவு செய்து மருத்துவரின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...