மதுரையில் திமுக முன்னாள் மண்டல தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரையில் பரோலில் சிறையில் இருந்து வந்த திமுக முன்னாள் மண்டல தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

  • News18
  • Last Updated: July 28, 2020, 3:24 PM IST
  • Share this:
மதுரை கீரைத்துறை சேர்ந்த திமுக முன்னாள் மண்டல தலைவர் வி கே குருசாமி தரப்புக்கும், அதிமுக முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டி தரப்புக்கும் இடையே நீண்டநாள் முன்பகை இருந்து வந்த நிலையில், இரண்டு தரப்பிலுமே பல கொலைகள் நடந்துள்ளன.

இந்நிலையில் வழக்கு ஒன்றில் சிறையில் இருந்த விகே குருசாமி உறவினர் ஒருவர் இறப்பிற்காக பரோலில் வந்துள்ளார். இந்தநிலையில், கீரைத்துறையில் உள்ள அவரது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிய 4 பேர் கொண்ட கும்பல், அங்கு வீட்டில் இருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களையும் அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியது.

படிக்க: ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வருடன் மருத்துவக் குழு நாளை மறுநாள் சந்தித்து ஆலோசனை


படிக்க: நடுக்காட்டில் இளம்பெண்ணின் புகைப்படத்தைவைத்து மாந்திரீக பூஜை செய்தது எதற்கு? விசாரணையில் இறங்கிய காவல்துறை

படிக்க: முருகனுக்கு ஒரு நியாயம்? வள்ளிக்கு ஒரு நியாயமா? மதுரை ஆட்சியரிடம் புகார்
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading