சித்திரைத் திருவிழாவுக்காக மதுரையில் கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப்பதிவு: தேர்தல் அதிகாரி பரிந்துரை

மதுரையில் வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கத் தயார் என்று ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: March 15, 2019, 12:34 PM IST

மதுரையில் வாக்குப்பதிவு நடத்த கூடுதலாக 2 மணி நேரம் ஒதுக்க பரிந்துரை செய்து மாவட்ட ஆட்சியர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

திருவிழா நேரத்தில் மதுரையில் மக்களவைத் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கோவில் திருவிழாவுக்காக மக்களவைத் தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

ஆனால் மதுரையில் வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கத் தயார் என்றும் கூறியது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ள மதுரை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜன் வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க பரிதுரைத்துள்ளார்.

Also see... தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் சென்னை சிறுவன்! 
First published: March 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...