மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது..!

பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் இன்று அதிகாலை எழுந்தருளினர்.

news18
Updated: April 18, 2019, 7:27 AM IST
மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது..!
மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தேரோட்டம்
news18
Updated: April 18, 2019, 7:27 AM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தீபாராதனைக்கு பிறகு  தேரோட்டம் தொடங்கியது.  திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று ( புதன்கிழமை) நடந்தது.

திருவிழாவின் 11-ம் நாளான இன்று தேரோட்டம் இன்று காலை 5:30 மணிக்கு மேல் தொடங்குகிறது. இதற்காக கீழமாசி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தேர்களில் பிரியாவிடை யுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் இன்று அதிகாலை எழுந்தருளினர். அதிகாலையிலிருந்தே பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர் .

தீபாராதனைக்கு பிறகு காலை 5 : 45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் சுவாமி சுந்தரேசுவரர் , பிரியாவிடையுடன், உள்ள பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

மங்கள வாத்தியங்கள், மேளதாளம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க பக்தர்கள் வெள்ளத்தில் தேர் மிதந்து வந்தது.
பெரிய தேர் எனப்படும் சுவாமி தேர் புறப்பட்ட சிறிது நேரத்தில், மீனாட்சி அம்மனின் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

Photos | வெகு விமர்சையாக நடந்த மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 
First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...