கந்துவட்டியால் பாதிக்கப்பட்டுள்ள காவலர்கள்...! பரபரப்பு தகவல்கள்

கந்துவட்டியால் பாதிக்கப்பட்டுள்ள காவலர்கள்...! பரபரப்பு தகவல்கள்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: February 24, 2020, 3:16 PM IST
  • Share this:
மதுரையில் ஆயுதப்படை போலீசார் கந்து வட்டி கொடுமையில் சிக்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அவசர அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரையில் கந்து வட்டி கொடுமையில் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதில் போலீசாரும் விதிவிலக்கல்ல என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதுரை ஆயுதப்படை போலீசார் கந்து வட்டி கொடுமையில் கடுமையாக பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக பரவலாகவே பேசப்பட்டு வந்தது.

ஆயுதப்படை போலீஸ் குடியிருப்புகளில் நடைபெற்ற சில தற்கொலை சம்பவங்களில் பின்னணியிலும் கந்துவட்டி கொடுமை இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.  இந்நிலையில் ஆயுதப்படை போலீசாருக்கு கந்து வட்டி மற்றும் ஏலச்சீட்டு உள்ளிட்டவை மூலம் கடும் நெருக்கடியில் இருந்து வருவதாகவும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உடனடியாக ஆயுதப்படை போலீசாருக்கு மதுரை மாநகர காவல்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சார்பில் ஆயுதப் படையின் அனைத்து சார்பு ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து அவசர விசாரணை நடத்தி 24 மணி நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. கடந்த 22-ம் தேதி அனுப்பப்பட்ட அந்த உத்தரவை ஏற்று நடந்த விசாரணை குறித்த அறிக்கை இன்று காலை அனுப்பப்பட்டுள்ளது. அதில் சில ஆயுதப்படை போலீசார் கந்துவட்டியால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.Also see...
First published: February 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading