பின்னணிப் பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் கொரானா வைரஸ் நோய் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டி பல்வேறு தரப்பட்ட மக்களும் ரசிகர்களும் பிராத்தனை செய்து வருகின்றனர்.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், அவர் நலம் பெற வேண்டி நடைபெறும் பிரார்த்தனைகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
அந்த வகையில் மதுரை கூடல்நகர் அருகே அஞ்சல் நகர் ஸ்ரீ மஹா பெரியவா கிரஹத்தில் பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும், உலக மக்கள் நன்மை வேண்டியும் காஞ்சி ஸ்ரீமகா பெரியவா விக்ரஹம் & வெள்ளி பாதுகைக்கு அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் கணேஷ சாஸ்திரிகள், சீனிவாசா சாஸ்திரிகள் முன்னிலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வசதிக்காக இணையவழி வாயிலாக தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டதுபின்னர் அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சார்பாக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.