ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடும் தளர்வு 10% மட்டும் கடைபிடிக்கப்படும் - மதுரை ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு..

ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடும் தளர்வு 10% மட்டும் கடைபிடிக்கப்படும் என மதுரை ஹோட்டல் உரிமையாளர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது

ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடும் தளர்வு 10% மட்டும் கடைபிடிக்கப்படும் - மதுரை ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு..
madhurai hotels
  • Share this:
ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடும் தளர்வு மதுரையில் வரும் திங்கட்கிழமை முதல் 10 சதவீதம் மட்டும் கடைபிடிக்கப்பட உள்ளதாக மதுரை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50% இருக்கைகளுடன் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு தளர்வுகள் அளித்த நிலையில், 10 சதவிகித ஹோட்டல்கள் மட்டும் இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பணியாளர்களை வேலைக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, மற்றும் எங்களது கோரிக்கைகளை இதுவரை மத்திய அரசும் மாநில அரசும் நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இது மேலும் எங்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.


மத்திய மாநில அரசுகள் இதில் முதலில் கவனத்தைச் செலுத்த வேண்டும் இல்லை என்றால் வேலை இழப்பு ஏற்படக் கூடிய பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்கள் முழுவதும் இயங்கவில்லை என்றால் அனைத்து வியாபாரிகளும் மற்றும் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தங்கும் விடுதிகளை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் இதில் இனியும் மெத்தனம் காட்டாமல் முதல்வர் அவர்கள் எங்களை அழைத்து பேச வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading